www.vwinslow.com
ஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)

தமிழ் கத்தோலிக்க இணையம்

Click here to edit subtitle

எங்கள் இணையத்துக்கு உங்களை வரவேற்கின்றோம். எங்களுடைய இணைய பக்கங்கள் உங்களுக்கு ஈர்ப்பூட்டும் வகையில் அமையும் என நம்புகின்றோம். கடவுள் வழியாக உங்களுக்கு சமாதானம், அன்பு & நிறைந்த ஆசீர்வாதம் கிடைக்க ஆசிக்கின்றோம்.

Follow official Twitter page of His Holiness POPE Francis :

பருசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயம்
உங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பதிவிட
மடு மாதா திருத்தலத்தில் 07/04/2020 இடம்பெற்ற திருச்சுரூப ஆசீர்
Note: இவ் மேலுள்ள காணொளி Fr.Anthonithas Dalima Christopar முகநூல் பக்கத்திற்கு சொந்தமானது.
குருத்தோலை ஞாயிறு திருப்பலி - 05/04/2020
யாழ் ஆயரில்ல சிற்றாலயத்திலிருந்து யாழ் குருமுதல்வர் அருட்த்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரினால் இன்று (05/04/2020) நடாத்தப்பட்ட திருப்பலியின் ஒளிப்பதிவு காணொளி
Note: இவ் திருப்பலி காணொளி யாழ் மறைமாவட்ட சமூக தொடர்புக்கான ஆணைய முகநூல் பக்கத்திற்கு சொந்தமானது.
எமது இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தில் தற்போதைய நிலை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள்
திருத்தந்தை உருவாக்கிய செபம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோரின் நலமாக விளங்கும் "அன்னை மரியாவை" நோக்கி எழுப்பியுள்ள செபம்:

ஓ, அன்னை மரியாவே, எங்கள் வாழ்வுப் பயணம் முழுவதிலும், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நீர் ஒளிர்கின்றீர். சிலுவையடியில், இயேசுவின் துயரத்தில் பங்கேற்ற வேளையிலும், நம்பிக்கையைக் காத்த நோயுற்றோரின் நலமே, உம்மிடம் எங்களையே ஒப்படைக்கிறோம். உரோம் மக்களின் பாதுகாவலே, கானா திருமணத்தில் தேவையறிந்து செயல்பட்ட நீர், எங்கள் தேவைகளையும் அறிவீர். எங்கள் துயரங்களும், போராட்டங்களும் நீங்கி, மகிழ்வும், கொண்டாட்டமும் வந்து சேருவனவாக.

இறையன்பின் அன்னையே, தந்தையின் திருவுளத்தையும், இயேசுவின் சொற்களையும் கேட்டு நடக்க எங்களுக்கு உதவியருளும். சிலுவையின் வழியே, எங்கள் துன்பங்களையும், வேதனைகளையும் தன் மீது சுமந்து, உயிர்ப்பின் மகிழ்வுக்கு எங்களை அழைத்துச் செல்பவர் இயேசுவே.

உமது பாதுகாப்பை நம்பி வந்துள்ள எங்கள் வேண்டுதலை தள்ளிவிடாமல், எங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும். ஆமென்.
தவக்காலம்

தவக்காலம் - கடவுளின் அருள்தரும் காலம்; தவக்காலம் - கடவுளுடன் உறவைப் புதுப்பித்தல் காலம்

விபூதிப்புதன் உடன் இவ்வாண்டுக்கான தவக்காலம் கிறீஸ்தவர்களுக்கு குறிப்பாக கத்தோலிக்கர்களுக்கு ஆரம்பமாகின்றது. "நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்" என்னும் தொடக்க நூல் வசனத்தை கூறி மனிதனின் பூரணத்துவத்தை குறிக்கும் இடமென்னும் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளத்தை வரைந்து இறையாசி வழங்கும் விபூதிப்புதன் (சாம்பல் புதன் ) வழிபாடுகளுடன் தவக்காலம் தொடங்கப்பெற்றுவிடும்.
கத்தோலிக்க மரபில் தவக்காலம் என்றால் என்ன ?

கத்தோலிக்க மரபில் தோன்றி கிறீஸ்தவர்களின் பெரும்பாலானவர்களுக்குப் பொதுவாக உள்ள தவக்காலம் என்றால் என்ன ? விபூதிப்புதன் முதல் உயிர்த்தஞாயிறு வரையிலான 46 நாட்கள் (ஆறு ஞாயிறுகள் நீங்கலாக) செபம் , தவம் , தவிர்ப்பு , பிராயச்சித்தம் செய்தல் என்பனவற்றுக்கான நாட்களாக உலகெங்கும் உள்ள கிறீஸ்தவர்களால் முன்னெடுக்கப்படும். இயேசு பெருமான் தன்பொதுப்பணியினை தொடங்கும்முன்னர் நாற்பது நாட்கள் பாலைவனத்தில் தவமியற்றியதையும், அலகையினால் சோதிக்கப்பட்டு அதனை அகன்று போகுமாறு பணித்ததையும் நினைவு கூறும் நிகழ்வாக இந்த 40 நாட்கள் தவக்காலமாக பின்பற்றப்படுகிறது. கடவுளை சார்பதற்கான உளமாற்றத்துக்கும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்வதற்கான ஐம்புலக்கட்டுப்பாட்டிற்குமான ஒரு காலமாக இக்காலம் கருதப்படுகின்றது. இவ்வாறு உள்ளமும் உடலும் கடவுளுடன் ஒன்றித்து வாழ்வதற்காக இறைத்துணை வேண்டிச் செபித்தல், தவம் செய்தல், தேவையற்ற நுகர்வுத் தவிர்ப்புக்களைச் செய்தல், உள்ளதைப் பகிர்தல் என்பன தவக்காலத்தின் நோக்காக அமையும். செபம் , தவம் , தானம் என்று சுருக்கமாகத் தவக்கால நோக்கினை கூறலாம். இயேசு பெருமான் தனது மக்கள் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர் 40 நாட்கள் வனாந்தரத்தில் தவமியற்றிய முன்னுதாரணத்தைப் பின்பற்றியே 40 நாட்கள் தவக்காலம் என்கின்ற கால அமைவு ஏற்படுத்தப்பட்டது என்பர்.

தவம் - இறைவனுக்காகவும் மானிடத்துக்காகவும் பணி செய்தலுக்கான அடித்தளமாகவும் அருட்தளமாகவும் உள்ளது என்பதை வலியுறுத்துவதால் கிறீஸ்தவர்களுக்கும் 40 நாள் தவக்காலம் இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலக வாழ்வுக்கும் இன்றியமையாதனவாகின்றன.

செபம் செய்வோம்! தவம் செய்வோம்!! தான தர்மம் செய்வோம்!!! மனம் மாறுவோம்! மனம் மாறுவோம்!! மனம் மாறுவோம்!!!

வத்திக்கான் சதுக்கத்திலிருந்து நேரடி


பிரான்ஸ் லூர்து நேரடி


போர்த்துக்கல் பாத்திமா நேரடி


புனித அந்தோணியாரின் திருப்பண்டம்(புனிதப்பொருள்)(Relic) அருட் தந்தை V.A.ஜெறோம்(OMI) அவர்களால் ரோமில் எடுக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு சுன்னாகம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது. காணொளி ( பாகம் - 1)
காணொளி ( பாகம் - 2)
வேதாகம கைநூல்
வேளாங்கன்னி நேரடி

LINKS

கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதன் காரணமாக கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலிகள், ஒன்றுகூடல்களை மார்ச் இறுதிவரை தவிர்த்துக்கொள்ள ஒத்துழைக்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Note: இவ் மேலுள்ள காணொளி கொழும்பு மறைமாவட்ட கத்தோலிக்க முகநூல் பக்கத்திற்கு சொந்தமானது.
கடந்த ஞாயிறு திருப்பலி - 29/03/2020
யாழ் ஆயரில்ல சிற்றாலயத்திலிருந்து அருட்த்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரினால் இன்று (29/03/2020) நடாத்தப்பட்ட திருப்பலியின் ஒளிப்பதிவு காணொளி
Note: இவ் திருப்பலி காணொளி யாழ் மறைமாவட்ட சமூக தொடர்புக்கான ஆணைய முகநூல் பக்கத்திற்கு சொந்தமானது.
பாதுகாவலன் பத்திரிகை
கிளிநொச்சியில், A9 வீதியில்(55ஆம் கட்டை) அமைந்துள்ள கோடி அற்புதராம் புனித அந்தோனியார் ஆலயத்தின் கட்டிட நிர்மாணப்பணி பங்குத்தந்தையின் முயற்சியினாலும் பங்குமக்களின் அயராத உழைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வெளிவரும் இதழ்கள்

தாய் - மாதாந்த சஞ்சிகை

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தினரால் வெளியிடப்படும் மாத இதழ் விலை:
இலங்கை ரூபாய் 25 மட்டுமே
பிரதான ஆசிரியர்: அருட்பணி ஆனந்தன் பெர்னாண்டோபுள்ளே.
ஆசிரியர்:அருட்பணி அருளானந்தம் உதயதாஸ்
வருடம் ஒன்றிற்கான சந்தா :இலங்கை ரூபா 500.00
5 வருடங்கள் சந்தா :இலங்கை ரூபா 2000.00
நீடியகால சந்தாதாரராக சேரவிரும்புகிறவர்கள் பின்வரும் இலங்கை தொ.பே எண்களுடன் தொடர்பு கொள்ளவும். அருட்தந்தை ஆனந்தன் : 0777 289960
அருட்தந்தை உதயதாஸ் : 071 8563646.
முகவரி:
தாய்,
தபால் பெட்டி எண் : 1233,
கொழும்பு,

மாதா தொலைக்காட்சி
மாதா தொலைக்காட்சியை தொலைபேசியில் தரவிறக்கம் செய்ய
திருயாத்திரை / புனிதப்பயணம் - 2020
கைபேசியில் கத்தோலிக்க திருவிவிலியம்

சிலுவைப்பாதை

வத்திக்கான் வானொலி

கத்தோலிக்கத் திருமறை
அருட்தந்தை அமலராஜ் அன்ரன் இன் தொகுப்பு
விஷேடமாக மறைக்கல்வி மாணவர்களிற்கு
இலங்கை கத்தோலிக்க விவரப்புத்தகம் - Mobile APP
புதுமை சிலுவையை நோக்கி செபம்

எனக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவே, உலகின் மீட்பரே, நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது, எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்! உலகெங்கும் பரவிவரும் நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள வேண்டுகிறோம். நோயுற்றவர்களைக் குணமாக்கும், நலமானவர்களைப் பாதுகாத்தருளும், அனைவரின் உடல்நலனுக்காக உழைப்பவர்களைத் திடப்படுத்தும். உம் இரக்கத்தின் திருமுகத்தை எம்மீது திருப்பி, உம் பேரன்பினால் எம்மைக் காத்தருளும். என்றும் எம்மோடு வழிநடக்கும் உம் தாயும் எங்கள் அன்னையுமான கன்னி மரியாவின் பரிந்துரையால் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.

புதுமை சிலுவையின் வரலாறு
கீழுள்ள click here இல் செல்லவும்...
உரோம் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள திருச்சிலுவை
உங்கள் பங்குகளில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இலவசமாக பிரசுரிக்க விரும்பின்,

உறுதிப்படுத்தப்பட்டு, எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். vwinslow@gmail.com