www.vwinslow.com
ஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)

தமிழ் கத்தோலிக்க இணையம்

Click here to edit subtitle

News / Articles

Obituary Notice - Rev.Fr. Arulnathan OMI

Posted on March 17, 2020 at 3:55 AM

அருட்த்தந்தை அருள்நாதன் (அமதி அவர்கள் இறைபதம் அடைந்தார். இவர் ஏழை மக்கள் மீதும் இளைய தலைமுறை

மற்றும் இளம் குருக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்ட துறவி. இவருடைய ஆத்மா இறைவனில் இளைப்பாற

இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Bad and sorrowful message. Rev.Fr. Arulnathan OMI has passed away. May his soul rest in peace. Amen.


அருட்தந்தை. அருள்நாதன் அமதி

********************************************

யாழ்ப்பாணம், நாரந்தனை புனித. பேதுரு பவுலானவர் ஆலயத்தைச் சேர்ந்த அருட்தந்தை அவர்கள், 1948ம் ஆண்டு பங்குனி மாதம் 18ம் திகதி பேதுரு மரியா தம்பதியினரின் இரண்டாவது பிள்ளையாக பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் சரவணை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ், வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லுரியிலும் கற்றுத் தேர்ந்தார்.

 

ஆண்டவரின் குரலுக்கு செவிமடுத்து 1970ம் ஆண்டு நுகேகொடவில் உள்ள அமலமரித் தியாகிகளின் சிறிய குருமடத்தில் குருமாணவனாக இணைந்து அரம்பபயிற்சியை முடித்துக்கொண்டு பண்டாரவளையிலுள்ள அ.ம.திகளின் நவசந்நியாச மடத்திலே 1977ம் ஆண்டு தனது முதல் துறவற அர்ப்பணத்தை மெற்கொண்டார். பின் அம்பிட்டியாவிலுள்ள தேசிய குருமடத்தில் தனது மெய்யியல், இறையியல் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து 1980ம் ஆண்டு ஆவணி 29ம் திகதி ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களினால் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

 

தனது முதல் பணித்தளமாக சுண்ணாகத்தில் உதவிப்பங்குத்தந்தையாக தன் ஆன்மீக மேய்புப் பணியை தொடங்கிய அருட்தந்தை அவர்கள் தொடர்ந்து முல்லைத்தீவு, வலைப்பாடு போன்ற பிரதேசங்களில் உதவிப் பங்குததந்தையாக தன் பணியை செவ்வனே செய்து தனது அழைப்புக்கு பிரமாணிக்கமாய் வாழ்ந்த இவர் பங்குத் தளங்களில் இறைமக்கள்பால் அன்பும் கரிசனையும் கொண்டு அவர்களை ஆன்மீக காரியங்களில் ஊக்குவிக்கும் ஓர் குருவாக திகழ்ந்தார். இதனால் ஒன்றன் பின் ஒன்றாக மன்னார் மற்றும் யாழ் மறைமாவட்டங்களில் தனது பங்குப்பணியை தொடர்ந்த தந்தை அவர்கள் 1982ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை ஓமந்தை, வங்காலை, தலைமன்னார், வவுனியா சிதம்பரபுரம், விடத்தல் தீவு, தேவன்பிட்டி, இலுப்பைக்குளம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும், மக்களை கட்டுப்பாட்டுடன் வழிநடாத்தினார்.

 

பின் 2011ம் அண்டு முதல் 2012 வரை பம்பைமடுவில் உள்ள புனித அன்னைதெராசா மடத்தில் ஆன்ம குருவாக பணிபுரிந்து ஈற்றிலே அமல உற்பவத்திலே அமதிகளின் தோழமையில் மகிழ்ச்சியாக கழித்து 16.03.2020 அன்று இறைபதம் எய்தினார்.

 

அருட்தந்தை வாழ்நாள் முழுவதும் செபத்தை தன் மேல்வரிச்சட்டமாக கொண்டு அன்னை மரியிடமும், திருச்சசெபமாலை பக்தியிலும் அசையா விசுவாசம் கொண்டவராய், அதனை மற்றவர் மனங்களில் பதிக்கச்செய்யும் ஆன்மீக சிற்பியுமாய் வாழ்ந்தார் என்றால் அது மறுக்க முடியாது. இளையோர் மட்டில் அதிக ஈடுபாடு கொண்டவராய் வாழ்ந்த தந்தை அவர்கள் அவர்களை கல்வியிலும், ஒழுக்கத்திலும், ஆன்மீக நெறியிலும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் நல் ஆசானாய் திகழ்ந்திருந்தார். சிறந்த பாடகராகவும் பக்தியுணர்வோடு வழிபாடுகளை செய்வதில் இவருக்கு நிகர் இவரே. பல குரு மாணவர்களை உருவாக்கித் திருச்சபைக்கு அளித்துள்ளார். சமூகத்திற்கு நல்ல தலைவர்களை உருவாக்கியுள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற உதவியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாது நவீன தொலைத்தொடர்பு சாதன வழி நற்செய்தி பறைசாற்றுவதில் மும்முரமாகச் செயற்பட்டு பலரை தன் முது வயதிலும் நன்நெறிப் படுத்துவதில் நோக்கம் கொண்டார் இந்த மறை பணியாளர். இத்தகை பல திறமைகளை தன்னகத்தே கொண்ட அருட்தந்தை அருள்நாதன் தன் துறவற அர்ப்பண வாழ்வில் அசைக்க முடியாத பிரமாணிக்கமும், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கையும், ஆன்மீக தோழமை வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து எம் யாவருக்கும் பல முன்மாதிரிகையான வாழ்க்கைத் தடங்களை விட்டுச் சென்றுள்ளார். இவரை அமலமரித் தியாகிகள் வழி திரு அவைக்கு கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவதுடன்இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.Categories: Obituary